Hathras Uttar Pradesh Stampede Religious Event Death : உத்திர பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில், பக்தி திருவிழா நடைப்பெற்றது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 25 பெண்கள் உள்பட 107 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹத்ராஸ் திருவிழா:


உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் கிராமம் உள்ளது. அங்கு போலே பாபா எனும் சாமியார் ‘சத்சங்’ எனும் இந்துமத பிரசார கூட்டத்தை நடத்தினார். இந்த மத நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள்-குழந்தைகள் உள்பட 107 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 


பலர் படுகாயம்!


இந்த மதக்கூட்டத்தில் கட்டுக்கடங்காமல் கூட்டம் திரண்டதால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 107 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கல் வேன்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், முதலில் பலியான 27 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 27 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், இந்த பலி எண்ணிக்கை கிடுகிடுவென 107ஆக உயர்ந்தது. 


மேலும் படிக்க | காதலனின் பிறப்புறுப்பு வெட்டி எறிந்த காதலி! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!


முதல்வர் இரங்கல்:


ஹத்ராஸில் நடந்துள்ள இந்த துயர சம்பவம், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்ட நெரிசல்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்துமாறு யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். 


பிரேத பரிசோதனைக்காக எடுத்துசெல்லப்பட்ட உடல்கள் மருத்துவமனைக்கு வெளியிலேயே தரையில் வைக்கப்பட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், வேன் மற்றும் ஆம்புலன்ஸ் இல்லாத காரனத்தால் சிலரது உடல்களை லாரியிலும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இது குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | மேம்பாலத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ